ADVERTISEMENT

பாகிஸ்தானின் மனுவில் ராகுல் காந்தி பெயர்.... காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்...

05:16 PM Aug 28, 2019 | kirubahar@nakk…

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐநா சபையில் பாகிஸ்தான் சமர்ப்பித்துள்ள மனுவில் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாகிஸ்தான் வெளியுறவுத் அமைச்சரான ஷிரீன் மசாரி கூறுகையில், "காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நாவிற்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ள மனுவில் காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மரணமடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி உள்பட பல முக்கிய கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் கூட காஷ்மீரில் பொதுமக்கள் மரணிப்பதாகவும், முறைகேடான விஷயங்கள் அங்கு நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்கள் என பாகிஸ்தான் அனுப்பிய மனுவில் கூறப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

பாகிஸ்தானின் மனுவில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம், இதில் பாகிஸ்தான் அல்லது வேறு எந்த நாடுகளும் தலையிட தேவையில்லை. அண்டை நாடான பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தின் முதன்மை ஆதரவாளர்.தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் அரசும், ராணுவமும் பாதுகாத்து வருகிறது, இது தொடர்பாக அந்நாட்டு மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்திற்கும் பாகிஸ்தான் பதிலளிக்க வேண்டியது கடமை என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT