இந்திய பயணிகள் விமானத்தை போர் விமானம் என நினைத்து பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் வழிமறித்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

spicejet flight interrupted by pakistani navy flights

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், செப்டம்பர் 23-ந் தேதி டெல்லியில் இருந்து காபூலுக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் 120 பயணிகளுடன் பாகிஸ்தான் வழியாக சென்றுள்ளது. அந்த விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும், பாகிஸ்தான் ராணுவத்தினர் அது இந்திய விமானப்படை விமானமாக இருக்கலாம் என சந்தேகித்து, அந்த விமானத்தை வானிலேயே 2 எப்-16 போர் விமானங்களை கொண்டு இடைமறித்துள்ளது பாகிஸ்தான். பின்னர் அது பயணிகள் விமானம் என்று தெரிந்ததும் அந்த 2 பாகிஸ்தான் போர் விமானங்களும் ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்திய விமானத்தை பின்தொடர்ந்து சென்றுள்ளன. இந்த தகவலை மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தற்போது வெளியிட்டுள்ளார்.