மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று பொக்ரான் பகுத்தியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Advertisment

rajnath singh about indias defence

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், "வாஜ்பாய் நினைவு நாளான இன்று நான் எதேச்சையாக பொக்ரான்வந்துள்ளேன். ஆனால் அவருக்கான அஞ்சலியை இங்கிருந்து செய்வதே எனக்கு இப்போது உகந்ததாக தோன்றுகிறது. அதேபோல, சண்டை என்று வந்தால் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை மாறலாம். இப்போதுவரை இந்தியா இதனை பின்பற்றுகிறது. ஆனால் எதிர்காலத்தில் சூழ்நிலைகளை பொறுத்து இது மாறலாம்" என தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உடன் பதட்டமான சூழல் நிலவி வரும் இந்த நிலையில் ராஜ்நாத் சிங்கின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.