ADVERTISEMENT

கரோனா தடுப்பூசியை எளிதாகப் பெறக் கூகுள் மூலம் புதிய வசதி அறிமுகம்!

04:22 PM Sep 01, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அண்மையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வாட்ஸ்அப் மூலம் கரோனா தடுப்பூசி சான்றிதழைப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப்பில் கரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் வசதியையும் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்தநிலையில் தற்போது மத்திய அரசு, மக்கள் எளிதாகத் தடுப்பூசி பெறும் வகையில் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியின் மூலம், மக்கள் கூகுளின் வழியாகத் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி நிலையத்தை அறிந்துகொள்வதோடு தடுப்பூசிக்காக தங்களது பெயரையும் பதிவு செய்துகொள்ளலாம்.

இந்த வசதியைப் பயன்படுத்த 'Covid vaccine near me' எனக் கூகுளில் தேட வேண்டும். இதன்பிறகு 'book appointment' என்பதைச் சொடுக்கி தடுப்பூசிக்காகப் பெயரை பதிவு செய்துகொள்ளலாம். இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவைத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT