covid 19 vaccine

இந்தியாவில்இரண்டு கரோனாதடுப்பூசிகளுக்கு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில், தடுப்பூசிசெலுத்துவது எப்போது தொடங்கும்எனஎதிர்பார்ப்பு நிலவியது.

Advertisment

இந்தநிலையில், வருகின்ற16 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிசெலுத்தும் பணி தொடங்கும்எனமத்திய அரசு அறிவித்துள்ளது. கரோனாதடுப்பூசி செலுத்துவதில், கரோனாமுன்களப் பணியாளர்களுக்கும், 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதன்பிறகு 50 வயதிற்குக் கீழுள்ள, இணை நோய் உள்ளவர்களுக்கு கரோனாதடுப்பூசிசெலுத்தப்படும் எனவும்தெரிவித்துள்ளது.

கரோனாமுன்களப்பணியாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் 3 கோடிபேர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், 50வயதிற்கு கீழே இணை நோய் உள்ளவர்கள் 27 கோடி இருப்பார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisment

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக் குழு, கரோனாதடுப்பூசி செலுத்தமாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தயார்நிலையை ஆராய்ந்தபிறகு, தடுப்பூசி செலுத்தும் பணிக்கானதேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.