ADVERTISEMENT

அதானி குழுமம் குறித்தான செய்திகள்; உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

12:13 PM Feb 24, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து செய்தி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

ஆசியாவின் நம்பர் ஒன் தொழிலதிபராக இருந்த கவுதம் அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளில் இருக்கும் வரி ஏய்ப்பு, ஹவாலா மோசடிகள் குறித்து ஆதாரங்களுடன் ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அதில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் அதானி குழுமத்தால் சரியான பதிலளிக்க முடியவில்லை. தொடர்ந்து அதானியின் பங்குகள் சரிவை சந்தித்தது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கையில், அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் தொடங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இந்த நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று (22/2/2023) கணிசமான வீழ்ச்சியுடன் வர்த்தகமானது. நேற்று காலை 10 மணிக்கு பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 141 புள்ளிகளில், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 162 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,664 புள்ளிகளில் வர்த்தகமானது. உள்நாட்டில் பணவீக்கம் உயர்வு, சர்வதேசப் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்கள் பங்குச் சந்தைகள் சரிவில் காணப்பட்டது. சர்ச்சையில் மாட்டிய அதானி குழுமம் நேற்றும் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின.

இந்நிலையில், அதானி குழுமம் பற்றிய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.சர்மா வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹிண்டன்பர்க் நிறுவன அறிக்கை குறித்தும் அதானி குழும நிறுவனங்கள் குறித்தும் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அந்த அறிக்கை குறித்தும் ஊடகங்கள் செய்தி வெளியிட எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT