Skip to main content

புயலைக் கிளப்பிய அதானியின் உலகப் பொருளாதார மோசடி; காப்பாற்றும் மோடி - விவரிக்கும் பால்கி 

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

Balki | Adani | Modi | Rahul Gandhi

 

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தலைமை மற்றும் பிரதமர் மோடி அதானிக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டை பற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பாளர் கடலூர் பால்கி விளக்கமாக விவரிக்கிறார்.

 

பரபரப்பான அரசியல் சூழலில் இந்தியாவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் அனைவரும் மும்பையில் ஒன்றிணைந்துள்ளனர். இந்த வேளையில், ஒன்றிய அரசின் நெருங்கிய நண்பரும் அவரின் நிழலாக இருக்கக்கூடிய அதானி குழுமத்தின் மீது வெளியிடப்பட்டுள்ளதே ஒ.சி.சி.ஆர்.பி அறிக்கை. இதன் அறிக்கை, ஒழுங்கமைக்கப்பட்ட நிறுவனங்களினுடைய வரைமுறை இல்லாத முறைகேடுகள் மற்றும் லாபங்களில் உள்ள சறுக்கல்களை வெளிக்கொண்டு வருவது. ஏற்கனவே, ஹிண்டன்பெர்க் அறிக்கையை எடுத்துக் கூறியபோதும் அதானி தரப்பில் இருந்து, இந்தியாவினுடைய வளர்ச்சியை கேள்வி கேட்பதே வெளிநாட்டு ஆதரவாளர்களின் குரல் என பதிலுரைத்தது. ஹிண்டன்பெர்க் அறிக்கையில், ‘போலியான நிறுவனங்கள், தேவைப்பட்ட நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கியது மிகப்பெரிய அளவில் இந்தியப் பொருளாதாரத்தில் வரைமுறையுள்ள விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவதை விட நிதிகளும் விதிகளற்ற முறையில் அதானி குழுமம் ஈடுபட்டதாக’ அறிக்கை கூறியது.

 

அதில், 29 நிறுவனங்களில் 5 செயல்படாதவை. 24  நிறுவனம் அவருக்கு நெருங்கியவை. அதிலும் 22 நிறுவனங்களில் விதிகள் மீறப்பட்டுள்ளது எனபதே அறிக்கை. இந்த 22 நிறுவனங்களில் இருக்கும் சறுக்கல்களைப் பற்றி முறையான விசாரணை நடத்த செபி தொடங்கியது. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனத்தையும் அவர்கள் ஆய்வு செய்துவிட்டனர். இந்த இருபத்தி இரண்டு நிறுவனங்களின் முறைகேடுகளை நீதிமன்றம் வெளிக்கொண்டு வரவேண்டும். மேலும், குற்றம் செய்தவர் என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றமற்றவர் என்றால் தீர்ப்பை வெளியிட வேண்டும். ஆனால், இந்த 22 நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி என்பதை அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பத்திரிகைகள் வெளியிட்டு வருகிறது. எனவே, தீர்ப்பை வெளியிடாமல் ஒத்தி வைத்திருப்பது. அதானியினுடைய ஆதரவு நிலைக்கு ஒன்றிய அமைச்சர் உள்பட அமைச்சரவையால் காட்டப்படும் பாரபட்சமே. செபி கூறுவதை வெளிக்கொண்டு வருவதே நீதிமன்றத்தின் வேலையாக இருக்க வேண்டும்.

 

தற்போது வெளியான ஒ.சி.சி.ஆர்.பி அறிக்கை என்பது ஹிண்டன்பெர்க் அறிக்கை போலவே தான். வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வரைமுறைகள் இருக்கிறது. ஆனால், அதானியின் குடும்ப நண்பரான நாசர் அலியும் அவரின் நண்பர் ஒருவரும் அதானியின் குழுமத்திற்கு பினாமியாக இருந்துள்ளனர் என அறிக்கை கூறுகிறது. 430 மில்லியன் டாலர் ஈடுபட்டுள்ளது என்றால் எவ்வளவு பெரிய தொகை என சிந்திக்க வேண்டும். இரண்டு நபர்கள், பெயர் குறிப்பிடப்படாத அரபு எமிரேட்ஸில் இருக்கும் நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்டச் சென்று பின்னர், அதில் வரும் பணத்தை மறு மூலதனம் செய்வது உலகின் பொருளாதாரத்தில், மாதிரியான நிறுவனம் ஒழுங்கமைப்பு விதிகளை மீறி செயல்பட்டுள்ளது என்பதனை ஒ.சி.சி.ஆர்.பி அறிக்கை சொல்கிறது. இதில் ஹிண்டன்பெர்க் அறிக்கையை விட அதிகம் தகவல்களை அளித்திருக்கிறது. அதனால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அறிக்கையின் பாதிப்பை பங்கு சந்தைகள் உணர்ந்ததால் பயங்கரமான சரிவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளிவந்தது. அதாவது, சில நிமிடங்களிலே அதானியின் பங்கு வீழ்ந்துள்ளது எனத் தெரிவிக்கிறது. 

 

அதானி தரப்பில் இருந்து ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கு, "அதானியின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்க முடியாதவர்கள், அதானியின் வளர்ச்சியை பற்றி பொறாமைப் படுபவர்கள் வெளிநாட்டுடன் சேர்ந்து சதி செய்கிறார்கள்” எனக் கூறியது. ஆனால், ஹிண்டன்பெர்க் அறிக்கையில் வெளிநாடுகள் குறித்து இல்லை. இருந்தும் அதானி இதனை அவ்வாறு குற்றம் சாட்டினார். இந்த அறிக்கையின் போது வீழ்ந்ததை விட குறைவான வீழ்ச்சி தான் ஹிண்டன்பெர்க் அறிக்கை. இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரப் பூர்வமாக அவர்கள் மறுக்கவில்லை. இரண்டாவது அறிக்கை வருவதற்கு முன் பிரசவத்தில் ஊழல் செய்தது என்பதையும் வெளியே கொண்டு வந்துள்ளனர். அதில், 62% சதவீத  ஆட்களை நாம் பரிசோதனைக்கு உட்படுத்தினோம். அதாவது, பிரசவத்திற்கு ஈடுபட்டுள்ள ஏஜென்சி மற்றும் அதன் முறைகேடுகளை விசாரிக்கையில், நூற்றுக்கு அறுபத்தி இரண்டு பேரை கணக்கில் எடுத்தோம். அவர்களில் 38% ஆண்கள் பிரசவித்துள்ளார்கள் என தெரிந்தது. இந்த ஏஜென்சி தான், அந்த அதானியின் 22 பினாமி நிறுவனத்தில் ஒன்று. இதுபோன்று இன்சுரன்ஸ் முறைகேடு நடந்துள்ளது. அதில், அந்த பகுதியில் உள்ள விவசாயிகளை விட நிறைய நபர்களுக்கு இன்சுரன்ஸ் செய்ததாகவும் பணப் பட்டுவாடா போன்றவை நடந்துள்ளதும் தெரிய வருகிறது. இதுவும் அந்த பினாமி நிறுவனங்களில் ஒன்று தான். ஹிண்டன்பெர்க் அறிக்கையில் ஆதாரங்களோடு குற்றம்சாட்டியதே சதி என்று சொன்னவர் அதானி. உலக மூலதனத்தில் கணிசமான தொகையை ஆட்டையைப் போடுகிறார்கள் என தெரியவந்தது. அவர்களை மறுப்பு அறிக்கை விடுக்கத் தள்ளியுள்ளது. அந்த இரண்டு நபர்களை விசாரித்தால், பண மதிப்பிழப்பு முறைகேடுகளை விட அதிக முறைகேடு நடந்தது வெளிச்சத்திற்கு வரும். அதானி சந்தித்திருக்கும் மிகப்பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சி இது என செபியின் ஆடிட்டர்கள் அறிக்கையை எழுதுகிறார்கள். 

 

சனிக்கிழமை மாலை மும்பையில் எதிர்க்கட்சிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இது குறித்து எதிர்க்கட்சிகள் வலிமையான குரல் எழுப்பும் இயக்கம் நடத்தவும் தயாராக உள்ளது. ஏற்கனவே, செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வரை பெரிய எதிர்ப்பிற்கு இந்திய கூட்டணி ஆட்கள் முயன்றுள்ளனர். மகாராஷ்டிராவில் நிலங்களை கடுமையான முறையில் அபகரித்து தொழிற்சாலைகளை கட்டுவதற்கு அதானி குழுமம் முயற்சித்தது. தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளனர். அதனால் நிச்சயம் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இயக்கம் நடத்தும். அதேபோல, அதானியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒன்றிய அரசுக்கு இருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். இவர்கள் எப்படி அவர்களை காப்பாற்றுவார்கள் என்பதனை காலம் தான் விளக்கும்.