ADVERTISEMENT

சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இன்று - மோடி ட்விட் 

09:30 PM Dec 11, 2019 | kalaimohan

மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பதற்கு பிரதமர் மோடி சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


125 உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த மசோதா ஆனது தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளுக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் நேற்று முன்தினம் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் மாநிலங்களவையில் 105 உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் இந்த மசோதாவானது சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு அவைகளிலும் குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கு முக்கியமான நாள் இது. இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்பிகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT