ADVERTISEMENT

மோடி அரசு காமெடி சர்கஸ் நடத்துகிறது! பிரியங்கா குற்றச்சாட்டு

11:18 PM Oct 20, 2019 | kalaimohan

பொருளாதாரத்துக்கான நோபல் விருதுபெற்ற அபிஜித் பானர்ஜி மோடி அரசின் பொருளாதார கொள்கையை விமர்சிக்கிறார் என்பதற்காக அவரையே கேலி செய்வதா? அவர் அவருடைய சாதனைகளுக்காக நோபல் விருது பெற்றிருக்கிறார். ஆனால், இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலையை விட்டுவிட்டு காமெடி சர்கஸ் நடத்தாதீர்கள் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியிருக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறப்பட்டது. இந்த திட்டத்தை நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி வரவேற்றார். ஆனால், காங்கிரஸ் தோற்றதால் அபிஜித்தின் கருத்தை இந்திய வாக்காளர்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆனால், அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்று மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார்.

அவருக்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்திருக்கிறார். அதில், “இந்திய பொருளாதாரம் சீர்குலைகிறது. அதை மேம்படுத்துவதே உங்கள் வேலை. அதைவிடுத்து காமெடி சர்கஸ் நடத்தாதீர்கள்” என்று கூறியிருக்கிறார். அவர் தனது ட்வீட்டுடன் இந்தியாவில் மோட்டார் உற்பத்தி மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி தொழில்துறை படுமோசமாக தொடர்ந்து வீழ்ச்சியடைவதற்கான புள்ளிவிவரங்களை இணைத்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT