ADVERTISEMENT

சிலை அமைப்பது யார்? பாஜக, மம்தா இடையே மோதல்...

04:05 PM May 16, 2019 | kirubahar@nakk…

கொல்கத்தாவில் செவ்வாய்கிழமை அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக பேரணியில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட சண்டை மிகப்பெரிய கலவரமாக மாறியது. பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன, பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. அப்போது புகழ்பெற்ற தத்துவ மேதையான வித்யாசாகர் மார்பளவு சிலையையும் உடைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிலையை உடைத்தது பாஜக தான் என திரிணாமூல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அதே நேரம் திரிணாமூல் காங்கிரஸ் தான் சிலையை உடைத்தது என பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, "கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வித்யாசாகர் சிலையை சிதைத்துள்ளனர். நாங்கள் வித்யாசாகரின் கொள்கையில் உடன்பாடு கொண்டவர்கள், எனவே அவருடைய சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் எனக் கூறினார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து கூறியுள்ள மம்தா பானர்ஜி, "சிலைகளை உடைப்பது என்பது பாஜகவின் வழக்கம் தான். ஏற்கனவே திரிபுராவில் லெனின் சிலை உட்பட பல சிலைகளை உடைத்தனர். தற்போது வித்யாசாகர் சிலையை உடைத்துள்ளனர். மேற்குவங்கத்தின் 200 ஆண்டுகால பண்பாட்டை பாஜக அழிக்க பார்க்கிறது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம். வித்யாசாகர் சிலையை அமைக்க பாஜகவின் பணம் வேண்டாம், நாங்களே சிலையை அமைப்போம்" என தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT