ADVERTISEMENT

3 இடியட்ஸ், முன்னாபாய் எம்.பி.பி.எஸ் இயக்குனர் மீது பாலியல் புகார்...

11:32 AM Jan 14, 2019 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிகே, 3 இடியட்ஸ் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி மீது அவரது பெண் உதவி இயக்குனர் ஒருவர் மீடூ புகார் தெரிவித்துள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான அவரது சஞ்சு திரைப்படத்தில் பணிபுரிந்த ஒரு பெண் உதவி இயக்குனர் இந்த புகாரை அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை ஹிராணி தரப்பு மறுத்துள்ளது. இதுபற்றி அவருடைய வழக்கறிஞர் ஆனந்த் தேசாய் கூறுகையில், ' இது ஒரு தவறான, பொய்யான, உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு' எனக் குறிப்பிட்டுள்ளார். ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அந்த பெண் இயக்குனர் தன பெயரை வெளியிடாமல் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மற்றும் செப்டம்பர் 2018 க்குள் ஹிரானி தன்னை பல முறை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 3 தேதி சஞ்சு படத்தின் இணை தயாரிப்பாளர் விது வினோத் சோப்ராவுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியதாகவும் அவர் கூறினார். மேலும் ஹிரானி, அவரது வீட்டு அலுவலகத்தில் தன்னை பாலியல் ரீதியாக சீண்டினார் எனவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். தமிழில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ், நண்பன் போன்ற படங்களை இந்தியில் இயக்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT