me too allegation against malayalam actor aneesh menon

Advertisment

மலையாளத்தில் 'லுசிபார்', 'ஓடியன்' உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான அனீஸ் மேனன் மீது இளம்பெண் ஒருவர் மீ டூபுகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், எனக்கு சிறுவயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம் அதிகம். குறிப்பாக மோனோ ஆக்ட். இதனைஉணர்ந்த என் பெற்றோர் குழந்தைகளுக்கு மோனோ ஆக்ட் மற்றும் நாடகம் என இரண்டையும் கற்றுக்கொடுக்கும் அனீஸ் மேனன் பயிற்சி வகுப்பில் சேர்த்து விட்டனர். நானும் வகுப்பிற்குசென்று வந்தேன். என் மீதி அதிக அனுப்பு கட்ட தொடங்கிய அவர் நாளாக நாளாக என்னிடம் அதிக சுதந்திரம்எடுத்துக் கொண்டார். கன்னங்களை தொடுவது, உடலை தொடுவது என பாலியல் சீண்டலில் ஈடுபடதொடங்கினர்.பொசிஷன்திருத்தம், தோரணை அழகு எனக் குறி என்னுடைய அந்தரங்க உறுப்புகளை தொட ஆரம்பித்தார்.

இதனைநடிப்பின் ஒரு பகுதி என்று என் பெற்றோர்களையே நம்ப வைத்துவிட்டார். ஒரு கட்டத்திற்கு மேல் சென்ற அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அந்த நேரத்தில் அழுகையாகவும், பயமாகவும், இருந்தது. இதையடுத்து எனக்கு நடிப்பு பயிற்சி வேண்டாம் என பெற்றோர்களிடம் கூறி விட்டேன். இந்த சம்பவத்தில் இருந்துமீண்டு வர எனக்கு பல வருடங்கள் ஆனது. என்னை போல நிறையபேர் அனீஸ் மேனனால் பாதிக்கப்பட்டிருக்கலாம். என்னை போன்ற ஒருவர் வெளிப்படையாக பேசினால் மற்றவர்களுக்கு தைரியம் வரும் என்பது எனது நம்பிக்கை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அனீஸ் மேனன் மலையாளத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால்மகளாக வரும் அனிசபாகுளிக்கும் போது படம் பிடித்துமிரட்டும் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததுகுறிப்பிடத்தக்கது.