ADVERTISEMENT

ஏர் இந்தியா நிறுவனத்தில் சைபர் தாக்குதல்: லட்சக்கணக்கானோரின் தனிப்பட்ட தகவல்கள் கசிவு!

12:03 PM May 22, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தின் இணையதளத்தில் மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் 45 லட்சம் பயணிகளின் பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் தகவல்கள், கிரெடிட் கார்ட் தகவல்கள், பயண விவரங்கள் உள்ளிட்டவை கசிந்துள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 வருடங்களில், அதாவது 2011 பிப்ரவரி முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரிவரை ஏர் இந்தியா விமான சேவையைப் பயன்டுத்திய 45 லட்சம் பேரின் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், கசிந்த தகவல்களைத் தவறாகப் பயன்படுத்தியதாக எந்தத் தடயமும் இதுவரை இல்லை என தெரிவித்துள்ளது.

தகவல்கள் கசிவைத் தொடர்ந்து, பயணிகள் தங்களது கடவுச்சொல்லை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியுள்ள ஏர் இந்தியா, தகவல் கசிவு குறித்த விசாரணைக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆணையங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது. கிரெடிட் கார்டு விவரங்கள் கசிந்தாலும், கிரெடிட் கார்டுகளின் சி.வி.வி விவரங்கள் கசியவில்லை என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT