chennai metro trains time extend

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இரவு 09.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisment

பயணிகளின் கோரிக்கையினை ஏற்று இரவு 09.00 மணி வரை நீட்டிப்பு செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (10/09/2020) முதல் காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்றும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பயணிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

கடந்த திங்கள்கிழமை முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. காலை 07.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.