ADVERTISEMENT

மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவை நாளை கூடுகிறது!

09:26 PM Dec 13, 2018 | sundarapandiyan

ADVERTISEMENT

கர்நாடக அரசு காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அம்முடிவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், கர்நாடக மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டமும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால், மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.

அதையடுத்து மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.

இதனிடையே நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்றும், வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கொண்டு வரும் தீர்மானத்தில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது நாளை தெரியவரும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT