ADVERTISEMENT

பாலியல் புகார் பாதிரியார் டிஸ்சார்ஜ்....

12:18 PM Sep 22, 2018 | santhoshkumar


கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமைகள் செய்ததாக சொல்லப்பட்ட பாதிரியார் பிராங்கோ இன்று காலை போலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். முதன் முறையாக இந்திய நாட்டிலேயே பாதிரியார் ஒருவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்படுவது இதுதான்.

ADVERTISEMENT

கேரள கன்னியாஸ்திரிகள் 13 பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் பாதிரியார் பிராங்கோ முலக்கல், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொச்சி காவல்துறையினரிடம் ஆஜராகினார். இந்த விசாரணையை கேரள காவல்துறையின் க்ரைம் பிரிவு வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. பிராங்கோ காவல்துறையினரிடம் ஆஜராகினால், கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நேற்று கேரள உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை வருகின்ற 25ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்க எடுத்துக்கொள்வதாக இருந்தது.

ADVERTISEMENT

நேற்று முந்தினம் பாதிரியார் பிராங்கோவுடன் காவல் துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் வாடிக்கனிலிருந்து பாதிரியார் பிராங்கோ வகித்த பதவியிலிருந்து விடிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக போலிஸார் விசாரணையை தொடர்ந்து நடத்தினர்.

இந்நிலையில், மூன்றாவது நாளான இன்று பாதிரியார் பிராங்கோவை கைது செய்வதாக அறிவித்தனர். கைது செய்யப்பட்டவுடன் பாதிரியார் நெஞ்சுவலி என்று போலிஸாரிடம் சொல்ல, அவரை சிகிச்சைக்காக கோட்டையும் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்துவிட்டதால் மருத்துவமனையில் இருந்து பாதிரியார் பிராங்கோவை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT