/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kerala-nun-rape.jpg)
கேரள கன்னியாஸ்திரிகள் 13 பேரை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக கூறப்படும் பாதிரியார் பிராங்கோ முலக்கல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொச்சி காவல்துறையினரிடம் ஆஜராகினார். இந்த விசாரணையை கேரள காவல்துறையின் க்ரைம் பிரிவு வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் தலைமையிலான ஐந்துபேர் கொண்ட குழு நடத்தி வருகிறது. பிராங்கோ காவல்துறையினரிடம் ஆஜராகினால், கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் நேற்று கேரள உயர் நீதி மன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை வருகின்ற 26ஆம் தேதி நீதிமன்றம் விசாரிக்கிறது.
நேற்றும் பாதிரியார் பிராங்கோவுடன் காவல் துறை விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில் நேற்று வாடிக்கனிலிருந்து பாதிரியார் பிராங்கோ வகித்த பதவியிலிருந்து விடிவித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிராங்கோவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கோட்டயம் எஸ்பி ஹரிசங்கர் தகவல் அளித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/18057647_719886548191985_4542912737982370865_n.jpg)