pastoral

கேரளாவில் கன்னியாஸ்திரிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் பிராங்கோவின் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் கேரள உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இவரின் மனு நேற்று மதியம் 1:45 மணிக்கு விசாரணை செய்வதாக இருந்தது.

Advertisment

ஆனால், பாதிரியார் பிராங்கோவுக்கு கொடுக்கப்பட்ட போலிஸ் காவல் நேற்றுடன் முடிவடைந்ததால், கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவை ஆஜர் செய்தனர். பின்னர், கோட்டயம் நீதிமன்றம் பாதிரியார் பிராங்கோவை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் பலா கிளைச்சிலையில் பாதிரியார் பிராங்கோ அடைக்கப்பட்டார்.

Advertisment

இதனிடையே ஜாமீன் கோரி பிராங்கோ தாக்கல் செய்த மனுவை வரும் வியாழக்கிழமை விசாரிப்பதாக கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளி வைத்தது.