ADVERTISEMENT

மிகப்பெரிய சூரிய சக்தி படகு உருவாக்கி சாதனைப் படைத்த கேரளா!

12:37 PM Jun 22, 2019 | santhoshb@nakk…

கேரளாவில் சாலை வழி போக்குவரத்தைக் காட்டிலும் நீர்வழி போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. அந்த மாநிலத்தில் சிறிய அளவிலான படகுகள் முதல் பெரிய அளவிலான படகுகள் வரை பயணிகள் போக்குவரத்துக்காகவும், சரக்கு போக்குவரத்துக்காகவும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக கேரள மாநில அரசு நீர்வழி போக்குவரத்து துறை (எஸ்டபிள்யூடிடி) என்ற துறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ரூபாய் 3 கோடி செலவில் 100 பேர் பயணிக்கும் வகையில் மிகப்பெரிய சூரிய சக்தி படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படகு டிசம்பர் மாதம் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏற்கனவே 2016- ஆம் ஆண்டு சூரிய ஒளி சக்தியால் இயங்கக்கூடிய சிறிய படகை உருவாக்கி கேரளா சாதனைப் படைத்தது. தற்போது அதை விட பெரிய அளவில் சூரிய ஒளி சக்திப் படகு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஒளி சக்திப் படகு சுமார் 80 கிலோ வாட் திறன் கொண்டது. இந்த படகு உருவாக்க ரூபாய் 3 கோடி செலவிடப்பட்டுள்ளதாக கேரளா நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த படகின் பெயர் ஆதித்யா ஆகும். அதே போல் சாதாரண டீசல் படகுகளை பயன்படுத்தும் போது தினமும் ரூபாய் 8000 செலவழிக்க வேண்டும். ஆனால் இந்த சூரிய ஒளி சக்தி படகு பயன்படுத்துவதன் மூலம் ரூபாய் 200 மட்டுமே செலவாகும் என அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த வகை படகுகள் காற்று மற்றும் ஒலி மாசுப்பாடுகளை ஏற்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இந்த படகு சேவை தொடரும் எனவும், அதன் பிறகு எர்ணாகுளம், கொச்சின் உள்ளிட்ட இடங்களில் சூரிய ஒளி சக்தி படகின் சேவை விரிவு செய்யப்படும் என கேரள மாநில படகு போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தன. மேலும் இரண்டு அடுக்குகளை கொண்ட இந்த வகை படகுகள் கீழ் அடுக்கில் மட்டும் ஏ.சி வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் மிகப்பெரிய சூரிய சக்திப் படகு உருவாக்கி கேரள சாதனைப் படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT