ADVERTISEMENT

வீட்டுக்குள் செய்ய வேண்டியதை சமூக ஊடகங்களில் வெளியிட்டது ஏன்..? ரெஹானா பாத்திமாவுக்கு நீதிமன்றம் கேள்வி...

01:20 PM Jul 25, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ரெஹானா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவைtத் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்.

கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான ரெஹானா பாத்திமா சர்ச்சைகளுக்குப் பெயர்போனவர். கேரளாவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், விதிமுறைகளை மீறி சபரிமலை கோயிலில் நுழைய முற்பட்டு போலீஸாரால் தடுக்கப்பட்டார். இந்தச் சம்பவம் மூலம் பிரபலமடைந்த ரெஹானா, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில், அண்மையில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையானதையடுத்து, அவர் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அண்மையில் தனது யூ- ட்யூப் பக்கத்தில், தனது அரை நிர்வாண உடலில் தனது மகன் மற்றும் மகள் ஓவியம் வரையும் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார் ரெஹானா. மேலும், அந்த வீடியோவில், தன் தாயின் உடலைப் பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது. பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்தச் சமூகம் மாறும் எனத் தெரிவித்திருந்தார். அவரது இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பா.ஜ.க. ஓ.பி.சி. மோர்ச்சா தலைவர் ஏ.வி. அருண் பிரகாஷ் இதுதொடர்பாக அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, ரெஹானா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் திருவல்லா போலீஸ் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தச்சூழலில், கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு நேற்று மனுத் தாக்கல் செய்திருந்தார் ரெஹானா. அதில், "என் குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக் கொடுக்கவே என் உடலில் ஓவியத்தை வரையச் செய்தேன். குழந்தைகளுக்கு பாலியல் குறித்த புரிதல் அவசியம்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், மனுவை விசாரித்த நீதிபதி உன்னிகிருஷ்ணன். "குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுக் கொடுக்க விரும்பியிருந்தால் அதை உங்கள் வீட்டுக்குள் செய்திருக்க வேண்டும். சமூகவலைத்தளங்களில் வெளியிட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பியதுடன் ரெஹானாவின் மனுவையும் தள்ளுபடி செய்தார். இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT