ADVERTISEMENT

மீனவ குடும்பங்களுக்கு மழை நிவாரணம் அறிவித்த கேரளா!

04:24 PM Nov 24, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் கடந்த அக்டோபர் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அம்மாநிலத்தில் வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த மழை தொடர்பான நிகழ்வுகளால் இதுவரை கேரளாவில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் வழங்கப்படும் என கேரளா அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் மழையின் காரணமாக அன்றாட வருமானத்தை இழந்த மீனவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

"அக்டோபர் மற்றும் நவம்பரில் பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டதால், ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 481 மீனவ குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா 3000 ரூபாய் வழங்கப்படும்" என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

மீனவ குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 47.84 கோடி ஒதுக்கப்படும் என கேரள நிதியமைச்சர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT