ADVERTISEMENT

மேம்பாலத்தில் தடுத்துநிறுத்தப்பட்ட விவகாரம்... இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

08:16 AM Jan 07, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த 5 ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூரில் 42 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதோடு, அங்கு நடைபெற இருந்த பேரணியில் உரையாற்றுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி காரில் சென்ற போது, சாலையில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், அவரது கார் 20 நிமிடங்கள் வரை மேம்பாலத்திலேயே நிற்க வேண்டியிருந்தது. இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு எனக் கூறிய மத்திய உள்துறை அமைச்சகம், இது குறித்து விளக்கம் அளிக்க பஞ்சாப் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏதுமில்லை என்றும், இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை என்றும் அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்தார். பிரதமரின் பாதுகாப்பு குறைபாடு குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலைத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குடியரசுத்தலைவரை பிரதமர் நரேந்திர மோடி நேற்று (06/01/2022) நேரில் சந்தித்தார். அப்போது பஞ்சாப் பயணத்தின் போது நிகழ்ந்தவற்றை குடியரசுத்தலைவரிடம் பிரதமர் எடுத்துரைத்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞர் மணிந்தர் சிங் கோரிக்கை வைத்திருந்த நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வர இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT