ADVERTISEMENT

பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்க ‘ஜிபிஎஸ்’ கருவி; உள்துறை அமைச்சகம் அனுமதி

02:54 PM Nov 15, 2023 | mathi23

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி சிறைத்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் குழு, மத்திய உள்துறையிடம் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘ஜாமீனில் விடுதலையாகும் சிறைக் கைதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொறுத்தலாம்’ என்று பரிந்துரை செய்தது. இது தொடர்பான நடவடிக்கையை காஷ்மீர் போலீசார் உடனடியாக அமல் செய்தனர். இந்த நிலையில், அனைத்து மாநிலங்களில் உள்ள சிறைவாசிகள் பரோலில் வெளியே வந்தால் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறையில் அடைக்கப்பட்டுள்ள கடும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளை மற்ற குற்றவாளிகளிடம் இருந்து பிரிக்க வேண்டும். தற்காலிக விடுதலை அல்லது பரோலில் வெளியே வரும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படலாம். அதேபோல், கைதிகள் தங்களின் நடமாட்டத்தை கண்காணிக்க இத்தகைய கருவியை அணிய வேண்டும் என்று விரும்பினால் சிறையிலிருந்து அவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம்.

சிறையிலிருந்து வெளியே சென்ற பிறகு அந்தக் கருவியை அகற்றினால், எதிர்காலத்தில் வழங்கப்படும் எந்தவொரு சிறை விடுமுறையையும் அந்த கைதிகளுக்கு வழங்கப்படுவதை ரத்து செய்யலாம். எனவே, பரோலில் விடுவிக்கப்படும் கைதிகளைக் கண்காணிக்கும் வகையில் அவர்களுக்கு ஜிபிஎஸ் கருவிகளை அந்தந்த மாநில அரசுகள் பொறுத்தலாம்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT