ADVERTISEMENT

டி 20 கிரிக்கெட்- இந்திய அணி அபார வெற்றி!

04:12 PM Jan 24, 2020 | santhoshb@nakk…

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் அதிக பட்சமாக மன்ரோ 59, ராஸ் டெய்லர் 54, வில்லியம்சன் 51, கப்தில் 30 ரன்கள் எடுத்தனர். அதேபோல் இந்திய அணியில் அதிக பட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 58, ராகுல் 56, விராட்கோலி 45 ரன்கள் சேர்த்தனர். மேலும் இந்திய அணி தரப்பில் பும்ரா, சஹால், துபே, ஜடேஜா, தாக்கூர் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT