நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய முதல் அணி இந்திய அணி ஆகும்.

Advertisment

new zealand vs india t20 match india win

நியூசிலாந்தில் மவுண்ட் மாங்கனுவில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 163/3 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ரோஹித் சர்மா 60 ரன்கள் குவித்து தசைப்பிடிப்பால் வெளியேறினார். மேலும் கே.எல். ராகுல் 45, ஸ்ரேயஸ் 33 ரன்கள் சேர்ந்தன. அதேபோல் பும்ரா 3, சைனி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

new zealand vs india t20 match india win

Advertisment

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 52, டிம் செய்ஃபெர்ட் 50 ரன்களும் எடுத்தனர்.நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர் நாயகனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.