Skip to main content

டி.20 கிரிக்கெட் - இந்திய அணி அபார வெற்றி!

Published on 18/03/2021 | Edited on 19/03/2021

 

t20 cricket match series india win

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

 

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து, 177 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்தது.

 

t20 cricket match series india win

 

இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57, ரிஷப் பந்த் 30, ஸ்ரேயாஸ் ஐயர் 37 ரன்களை எடுத்தனர். அதேபோல், இங்கிலாந்து அணித் தரப்பில் அதிகபட்சமாக பென்ஸ்டோக்ஸ் 46, ஜாசன் ராய் 40 ரன்களை எடுத்தனர்.

 

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை '2- க்கு 2' எனும் வெற்றிக் கணக்கில் சமன் செய்தது இந்திய அணி. டி20 தொடரை வெல்வதற்கான இறுதிப் போட்டி மார்ச்- 20- ஆம் தேதி நடைபெறுகிறது. 

 


 

Next Story

டி20 கிரிக்கெட்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு! 

Published on 23/05/2022 | Edited on 23/05/2022

 

T20 cricket: Indian cricket team announced!

 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில், விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இஷாந்த் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயர், சாஹர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், தீபக் ஹூடா, புவனேஷ்வர் குமார் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். 

 

அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ்,  பும்ரா உள்ளிட்ட 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  
 

 

Next Story

மெதுவாக பந்து வீசினால் இனி போட்டியின்போதே தண்டனை - புதிய விதிமுறையை அறிவித்த ஐசிசி!

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

icc

 

சர்வதேச ஒருநாள் போட்டிகளில், குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி பந்து வீசி முடிக்காவிட்டால், அந்த அணிக்கு அபராதம் விதிக்கப்படும். இந்தநிலையில் இருபது ஓவர் போட்டிகளில் மெதுவாக பந்து வீசும் அணிக்கு (slow over rate) போட்டியின் போதே தண்டனை விதிக்கும் புதிய விதியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

 

அந்த விதியின்படி பந்து வீசும் அணி, இன்னிங்ஸ் முடிய வேண்டிய நேரத்தில் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசும் நிலையில் இருக்க வேண்டும். இல்லையெனில் கடைசி ஓவர் 30 யார்டு வட்டத்திற்குள் நான்கு வீரர்களுக்கு பதிலாக ஐந்து வீரர்கள் நிற்க வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், ஹண்ட்ரட் தொடரில் அறிமுகப்படுத்திய இந்த விதிமுறை, போட்டியின் வேகத்தை அதிகப்படுத்தியதால்  தற்போது சர்வதேச இருபது ஓவர் போட்டியிலும் அறிமுகமாகவுள்ளது.

 

மேலும் சர்வதேச கிரிக்கெட் வாரியம், விருப்பத்தின் பேரிலான இரண்டரை நிமிட ட்ரிங்ஸ் பிரேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது.