ADVERTISEMENT

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

09:53 AM Jan 22, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. இந்தநிலையில், நேற்றைவிட இன்று, கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்தியாவில் நேற்று 3 லட்சத்து 47 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு மட்டுமே கரோனா உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 488 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையே, நாட்டில் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 50ஆக உயர்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT