ADVERTISEMENT

பிரதமர் மோடி பேசிய மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் எதிர்ப்பு முழக்கம்!

07:52 AM Sep 23, 2019 | santhoshb@nakk…

சில மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா வாழ் இந்தியர்கள் சந்திக்கும் கூட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு, அதற்காக பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டம் திட்டமிட்டப்படி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை (23/09/2019) அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள என்ஆர்ஜி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியர்கள் மத்தியில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று பேசினர்.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை டெக்ஸாஸ் மாகாண நிர்வாகமும், இந்தியத் தூதரகமும் இணைந்து செய்திருந்தன. ஹவுடி மோடி என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் மைதானத்திற்குள் இருந்த கூட்டத்திற்கு இணையாக வெளியிலும் இந்தியர்கள் கூடியிருந்தனர். கூட்ட அரங்கில் இருந்தவர்கள் மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள் என்றால் வெளியில் இருந்தவர்கள் மோடிக்கும், ஹிந்துத்துவா கொள்கைக்கும், மோடி மற்றும் பாஜகவின் ஜனநாயகப் படுகொலைக்கும் எதிராக ஆவேசமாக முழக்கமிட்டனர்.

ADVERTISEMENT


இந்தியாவின் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தங்களுடைய போராட்டம் ஹிந்துக்களுக்கு எதிரானது அல்ல என்றும் ஹிந்துத்துவா கொள்கைக்கு எதிரானது என்றும் கூறினார்கள். இந்தியர்களுடன் அமெரிக்கர்களும் ஏராளமாக இருந்தனர்.மேலும் காஷ்மீரில் மோடி அரசு நடத்தும் அராஜகங்களை கண்டிப்பதாக தெரிவித்தனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT