சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் சாலை மார்கமாக கார் மூலம் மாமல்லபுரம் புறப்பட்டார்.

Advertisment

சீன அதிபர் செல்லும் சாலை வழியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிண்டி முதல் மாமல்லபுரம் வரையிலான சாலைகளில், இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு 10,000- க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. சீன அதிபர் ஷி ஜின்பிங் செல்லும் காருடன் 20 வாகனங்கள் பின்தொடர்ந்து அணி வகுத்து செல்கின்றனர். சீன அதிபர் செல்லும் சாலை நெடுகிலும் செண்டை மேளம் உட்பட வாத்தியங்கள் முழங்க, பாரம்பரிய நடனங்கள் உடன் உற்சாக வரவேற்பு. மேலும்பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

CHINA PRESIDENT ARRIVE AT MAMALLAPURAM

இதற்கிடையே கோவளம் நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரம் புறப்பட்டார். மாமல்லபுரத்தில் அர்ச்சுனன் தபசு பகுதியில் அதிபரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கவுள்ளார்.

alt="CHINA PRESIDENT ARRIVE AT MAMALLAPURAM" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d897a0e6-c3bf-4d8d-a779-41eb67a8361f" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500X300_80.jpg" />

Advertisment