ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு 16 லட்சத்தை நெருங்கியது!

09:49 AM Jul 30, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கியது.

இன்று (30/07/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,31,669- லிருந்து 15,83,792 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,193- லிருந்து 34,968 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9.88 லட்சத்திலிருந்து 10.20 லட்சமானது. கரோனா பாதித்த 5,28,242 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு 52,123 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், கரோனா வைரஸ் பாதிப்பால் 775 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT