ADVERTISEMENT

“முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன” - பிபிசி ஆய்வு குறித்து வருமான வரித்துறை விளக்கம்

06:20 PM Feb 17, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்தது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் பிபிசி நிறுவனத்தின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் நேற்று முன்தினம் (14.2.2023) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை 3வது நாளான இன்றும் நடைபெற்ற நிலையில் தற்போது முடிந்துள்ளது. இது சோதனை அல்ல. கணக்கு ஆய்வு என்று தெரிவித்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், மறைக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத சொத்துமதிப்புகளை வெளிக்கொண்டு வரும் வகையில் பிபிசியின் வங்கிக் கணக்குகளை சரிபார்த்து வருவதாகக் கூறியிருந்தனர்.

இந்நிலையில், சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், சில பரிவர்த்தனைகளை பிபிசி நிர்வாகம் கணக்கில் காட்டவில்லை எனவும் வருமான வரித்துறை இந்த ஆய்வு குறித்து விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT