ADVERTISEMENT

துணியில் இருந்து மின்சாரம் எடுத்து ஐஐடி மாணவர்கள் சாதனை!

05:01 PM Nov 04, 2019 | suthakar@nakkh…

உலக அளவில் விரைவில் மின்சார தட்டுபாடு வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், திறந்த வெளியில் உலர்த்தப்படும் துணிகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மேற்குவங்கத்தில் உள்ள காராக்பூர் ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சிறிய அளவிலான மின்சார தேவையினை தீர்க்க முடியும் என்றும் மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT



ADVERTISEMENT

இந்த தொழில்நுட்பம் குறித்து ஐஐடி பேராசிரியர் சக்ரவர்த்தி கூறுகையில், துணிகள் செல்லுலோஸ் என்ற பைபர்களால் ஆனது. அவற்றின் சுவர்களில் மின் அணுக்கள் இருக்கும். சிறிய அளவிலான துணியை உப்பு கரைசலில் நீங்கள் மூழ்க வைக்கும்போது, அதில் உள்ள பைபர் மற்றும் அயனியாக்க துகள்களால் அந்த துணி மிதக்கும். அதனை தொடர்ந்து அவை மின்சாரத்தை உற்பத்தி செய்யும். இதை மின் சேமிப்பானுடன் இணைக்கும் போது சிறிய அளவில் மின்சாரத்தை சேமிக்க முடியும். சலவை தொழிலாளிகள் துணியை உலர்த்தும் முறையை கொண்டு இந்த தொழில்நுட்பத்தை நாங்கள் உருவாக்கினோம். இந்த மின்சாரம் பெரிய அளவிலான பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்காது. ஆனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்ற நிச்சயம் போதுமானதாக இருக்கும் என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT