Tragedy of power outage; Uttarakhand incident

Advertisment

டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து மின் கசிவு ஏற்பட்ட விபத்தில் உதவி ஆய்வாளர், பாதுகாவலர் என 16 பேர் உயிரிழந்த சம்பவம் உத்தரகாண்டில் நிகழ்ந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஜலோளி பகுதியில் கங்கை நதி தூய்மைத்திட்டத்தின் கீழ் அலக்நந்தா ஆற்றங்கரையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அப்பொழுது திடீரென அங்கு டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து மின் கசிவு ஏற்பட்டது. இதில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து ஆற்றுப் பாலத்தின் கைப்பிடியில் இரண்டாவது முறையாக மின் கசிவு ஏற்பட்டது. இதிலும் பலர் சுருண்டு விழுந்தனர். மொத்தமாக 16 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. 11 பேர்காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த ஏழு பேர் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் கொண்டு செல்லப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.