time extention to pay electricity bills only in these districts !!

தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கரோனாகண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 5000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதனால் இதுவரை குணமடைந்தோர்எண்ணிக்கை 1,02,310 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்களைவிட, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.அதேபோல் ஜூலை 31-ஆம் தேதி வரை பொது மற்றும் தனியார் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மின் கட்டணத்தை செலுத்த குறிப்பிட்ட ஆறு மாவட்டங்களுக்குஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் கொடுத்து மின் வாரியம் அறிவித்துள்ளது. மின் கட்டணம் செலுத்த அறிவிக்கப்பட்ட கடைசி தேதியிலிருந்துமேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து ஜூலை 30-க்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில், கட்டுப்பாடு நீக்கப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment