ADVERTISEMENT

துப்பாக்கியில் தோட்டாவைப் பொருத்தத் தெரியாத உதவி ஆய்வாளர்; அதிர்ச்சியான ஐஜி

10:35 AM Dec 28, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

உ.பி.யில் ஐஜி திடீர் ஆய்வுக்குச் சென்றபோது, உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியில் தோட்டாவை எப்படிப் பொருத்துவது எனத் தெரியாமல் திக்குமுக்காடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சந்த் கபீர் நகர் மாவட்டம் கிலாபாத் காவல் நிலையத்தில் ஐஜி பரத்வாஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள காவலர்களிடம் துப்பாக்கியை எப்படிப் பிடிப்பது? எப்படிச் சுடுவது எனச் சோதனை செய்தார். இதில் பல காவலர்கள் சரியாகத் துப்பாக்கியால் சுடத் தெரியாமல் திணறினர். அதிலும் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் துப்பாக்கியில் எப்படி தோட்டாவைப் பொருத்த வேண்டும் என்று கூறி, அதைச் செய்துகாட்டும்படி கூறினார்.

அப்போது துப்பாக்கியில் எப்படி தோட்டாவைப் பொருத்துவது எனத் தெரியாமல் உதவி ஆய்வாளர் தடுமாறினார். மேலும், அந்த உதவி ஆய்வாளர் தோட்டா வெளியேறும் வழியில் தோட்டாவைப் பொருத்த முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஜி பரத்வாஜ், இது குறித்து தொடர்ந்து பயிற்சி எடுக்குமாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT