ADVERTISEMENT

ஊழியர்களுக்கு பார்க்கிங் கட்டணம் விதித்த இன்ஃபோசிஸ் நிறுவனம்!

09:32 AM May 09, 2019 | santhoshb@nakk…

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் இன்ஃபோசிஸ் நிறுவனம்,தனது ஊழியர்களுக்கே பார்க்கிங் கட்டணம் விதித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 250 , கார்களுக்கு ரூபாய் 500 ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை ஊழலுக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த விஜயன் கோபால் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிறுவனம் "சிறப்பு பொருளாதார மண்டலத்தின்" கீழ் இயங்கி வருவதாகவும், அரசின் சலுகைகள் அனைத்தையும் இந்த நிறுவனம் பெற்று வருவதால் , இது தொடர்பாக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இது குறித்து இன்ஃபோசிஸ் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில் இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு நல அறக்கட்டளை இருப்பதாகவும் , ஊழியர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் அறக்கட்டளைக்கும், பார்க்கிங் இடங்களை பராமரிக்க செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல் இந்தியாவில் உள்ள மற்ற மென்பொருள் நிறுவனங்களும் இத்தகைய முடிவை எடுக்க அதிக வாய்ப்பு உள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT