ADVERTISEMENT

ஜே.என்.யு தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு...

12:10 PM Jan 07, 2020 | kirubahar@nakk…

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு இந்து ரக்‌ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அந்த அமைப்பின் தலைவர் பிங்கி சவுத்ரி, "ஜே.என்.யு தேச விரோத நடவடிக்கைகளின் மையமாகிவிட்டது. இதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஜே.என்.யுவில் நடந்த தாக்குதலின் முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தினர்" என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு தரப்பில், "இந்து ரக்‌ஷா தளத் தலைவர் பிங்கி சவுத்ரி பேசியது தொடர்பாக விசாரிக்கப்படும். வீடியோ காட்சிகள் மற்றும் முகம் அடையாளம் காணும் அமைப்புகளின் உதவியோடு விசாரணை நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT