டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

pinarayi vijayan about jnu issue

முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "ஜே.என்.யு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சகிப்பின்மையைகாட்டும் ஒரு பயங்கரமான காட்சி. தாக்குதலின் வீரியத்தை வைத்தே திட்டமிடலின் அளவை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. பல்கலைக்கழகங்களை ரத்தக்களரியாக்காமல் அமைதியை நிலைநாட்டுவதற்கு, சங்பரிவார் அமைப்புகள் இந்த மாதிரியான கொடூரமான திட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், அந்த மாணவர்கள் நாம் அனைவருக்கும் செத்துத்தான் போராடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.