டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fbgdfgbdf.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று தாக்குதல் நடத்தியதால் நேற்று இரவு பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட தகவலின்படி எஸ்எஃப்ஐ மற்றும் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர் சங்கத் தலைவர்களை ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கூறப்பட்டது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வழிநெடுகிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தினர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "முகமூடி குண்டர்களால் ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதல் பலரை பலத்த காயப்படுத்தியுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டை அடக்கியாள நினைக்கும் பாசிஸ்டுகள், தைரியம் கொண்ட மாணவர்களின் குரல்களுக்கு பயந்துவிட்டார்கள். அந்த பயத்தின் வெளிப்பாடுதான் மாணவர்கள் மீதான இந்த தாக்குதல்" என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரியங்காகாந்தி, "இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற உலகளாவிய நற்பெயரைக் கொண்டுள்ளது. ஆனால், இப்போது மோடி-ஷாவின் குண்டர்கள் நமது பல்கலைக்கழகங்கள் வழியாக மாணவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)