ADVERTISEMENT

ஆகஸ்ட் 8- ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத் ரத்னா' விருது வழங்குகிறார்- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்!

09:09 AM Jul 29, 2019 | santhoshb@nakk…

நம் நாட்டின் மிக உயரிய விருதாக ‘பாரத ரத்னா’ கருதப்படு கிறது. நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பதவி வகித்த (2012-17) பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பை வெளியிட்டது. இதுபோல, சமூக ஆர்வலர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமி பாடகர் பூபென் ஹசாரிகா ஆகியோருக்கும் மரணத்துக்குப் பிந்தைய பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 8-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள விழாவில் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருதை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். இதுபோல, நானாஜி தேஷ்முக் மற்றும் பூபென் ஹசாரிகா ஆகி யோர் சார்பில் அவர்களது குடும்பத்தினர் விருதை பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிகிறது. இதனை தொடர்ந்து ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT