ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி கடந்த மாதம் பதவியேற்றார். இந்நிலையில் இன்று ஆந்திர மாநில அமைச்சர்களாக 25 பேர் பதவியேற்பு நிகழ்வு மற்றும் 5 துணை முதல்வர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி இன்று காலை 11.49 மணியளவில் நடைபெறவுள்ளதால், ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் உள்ள ஆந்திர மாநில தலைமை செயலகத்திற்கு வந்து முறைப்படி முதல்வராக பதவியேற்றார் ஜெகன்மோகன் ரெட்டி. முன்னதாக தலைமை செய்யலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வரும், தனது தந்தையுமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவ படத்திற்கு மலர் தூவி வணங்கினார்.

amaravati cm jaganmohan

Advertisment

Advertisment

அதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் நடந்து வரும் அமைச்சரவை பதவியேற்பு விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவையில் நகரி சட்டமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவிற்கு துணை முதல்வர் அல்லது மாநில உள்துறை அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.