ADVERTISEMENT

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

12:04 PM Jan 28, 2024 | prabukumar@nak…

மீன்பிடி துறைமுகம் அமைத்துத் தர வலியுறுத்தி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதால் காரைக்காலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டம் திருபட்டினம் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு, தங்கள் பகுதியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வலியுறுத்தியும், குடிநீர் நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வலியுறுத்தியும், அரசால் 2009 இல் கட்டப்பட்டு இதுவரை பயன்பாட்டிற்கு வராமல் இருக்கும் ஐஸ் பிளான்ட்டை உடனடியாக அரசு திறக்க வலியுறுத்தியும் மீனவர்கள் கடந்த 25 ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பைபர் படகு மற்றும் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் இன்று பட்டினச்சேரி கடற்கரையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய - மாநில அரசுகளுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் மீனவப் பெண்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT