சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரையில் 33 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், ஐநூறுக்கும் மேற்பட்ட படகுகளில் கடலில் இறங்கி கருப்புக்கொடி கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை, புதுப்பேட்டை, சின்னாண்டி குழி, பெரியாண்டிகுழி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சாமியார்பேட்டை கடலில் இறங்கி 500-க்கும் மேற்பட்ட படகுடன் மீனவர்கள் கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மீனவ கிராமத்தில் உள்ள பெண்கள் கடற்கரையில் கருப்பு கொடியுடன் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், "எங்களின் ஒரே கோரிக்கை சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்பதுதான், இதற்காகத்தான் நாங்கள்போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.சுருக்குமடி வலைக்கான தடையை அரசு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் உறுதிப்படுத்தும்வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும்” எனவும் கூறினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/dsfhgjhj.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/rdfjg.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/zdfc.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-07/zfszfsfs.jpg)