ADVERTISEMENT

வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வரி விதிப்பா..? நிதி அமைச்சகம் புதிய தகவல்...

04:49 PM Oct 31, 2019 | kirubahar@nakk…

பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின்போது கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தங்கள் பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி விட்டதால் மத்திய அரசு, வீட்டில் உள்ள தங்கத்திற்கு வரி விதிப்பது தொடர்பாக யோசித்து வருவதாக தகவல் வெளியானது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதன்படி, தனிநபர் ஒருவர் ரசீது இல்லாமலும், கணக்கில் காட்டப்படாமலும் வைத்திருக்கும் தங்கத்தை அரசிடம் தெரிவித்து அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்றும், இதற்கு 30 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் நாடு முழுவதும் மக்களிடையே குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் நிதியமைச்சக வட்டாரத்திலிருந்து இதுகுறித்து தகவல்களை பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நிதியமைச்சக வட்டாரத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, தங்கத்திற்கு வரிவிதிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை என கூறப்பட்டுள்ளதாகவும், பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் இதுபோன்ற திட்டங்கள் குறித்த தகவல் பரவுவது சாதாரணமான ஒன்றுதான் எனவும் நிதியமைச்சக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT