ADVERTISEMENT

வலுவான எதிர்க்கட்சி இல்லாததே வீதிக்கு வர காரணம் - விவசாய அமைப்பு விமர்சனம்!

11:49 AM Dec 30, 2020 | rajapathran@na…

ADVERTISEMENT

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் 35வது நாளாக தொடர்ந்து வருகிறது. இன்று விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 6 ஆம் காட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் வலுவான எதிர்க்கட்சி இல்லாததே, விவசாயிகள் வீதிக்கு வர காரணம் என போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் விவசாய அமைப்பு விமர்சித்துள்ளது.


இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் அமைப்பு, "அரசாங்கம் பயப்படும் அளவிற்கு வலுவான எதிர்க்கட்சி நாட்டில் இருப்பது அவசியம். ஆனால் இங்கு அவர்கள் பயப்படுவதில்லை. இதனால்தான் விவசாயிகள் வீதிக்கு வரவேண்டியதாகவிட்டது. எதிர்க்கட்சிகள் விவசாய சட்டங்களுக்கு எதிராக, கூடாரத்தில் அமர்ந்து வீதியில் போராட்டம் நடத்த வேண்டும்" என கூறியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT