harindhar singh halsa

மத்திய வேளாண்சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகளின் போராட்டம் 31வது நாளாக, தொடர்ந்து வருகிறது. மத்திய அரசுக்கும்விவசாயிகளுக்குமான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்தநிலையில், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினர்ஹரிந்தர் சிங் கல்சா, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாஜகவில்இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து ஹரிந்தர்சிங் கல்சா, போராடும்விவசாயிகள், மனைவிகள் மற்றும் குழந்தைகள் படும்துன்பம் குறித்துஉணர்வற்றதன்மையைக் காட்டியகட்சித் தலைவர்களையும், அரசையும்கண்டித்துபாஜகவிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

ஹரிந்தர் சிங் கல்சா, கடந்த 2014 ஆம் ஆண்டு ஆம் ஆத்மிகட்சியின் சார்பாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்பு ஆம் ஆத்மியிலிருந்து விலகி 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.