ADVERTISEMENT

ஒரு ஆண்டில் 230 கிலோ தங்கம் கடத்தல்... கேரள விவகாரத்தில் வெளிவரும் உண்மைகள்...

03:17 PM Jul 20, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துபாயில் இருந்து தூதரக பெயரில் 230 கிலோ வரை தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது.

தங்கக்கடத்தல் விவகாரம் கேரளா அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கம் அண்மையில் பிடிபட்டது. இந்தக் கடத்தல் விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் மற்றும் அவரது மனைவி, தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுதொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. முடுக்கிவிட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் மற்றொரு முக்கியக் குற்றவாளியான பைசல் ஃபரீத் கடந்த வாரம் துபாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். விரைவில் பைசல் ஃபரீத்தை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வரும் சூழலில், துபாய் போலீஸார் நடத்திய விசாரணையில், ஜூலை 2019 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக பணியின் சில ஊழியர்களைப் பயன்படுத்திக் குறைந்தது 230 கிலோ தங்கம் நாட்டிற்குக் கடத்தப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT