ADVERTISEMENT

கருத்துக்கணிப்பில் பாமக,தேமுதிகவின் நிலை! 

04:39 PM May 22, 2019 | Anonymous (not verified)

அனைத்து கட்சிகளும் தேர்தல் முடிவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னிலை பெரும் என்ற நிலையில் அதிமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக, பாமகவிற்கு இந்த தேர்தலில் ஓட்டு வங்கி குறைந்ததாக சொல்லப்படுகிறது.மேலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பாமக, தேமுதிக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT



இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என்று எதிர்பார்த்து தே.மு.தி.க,பா.ம.க.வினர் காத்திருக்கின்றனர். இதில்பா.ம.க.விற்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா பதவியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.தே.மு.தி.க.விற்கு 4 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரண்டு கட்சிகளும் உள்ளன. ஆனால் கருத்து கணிப்பு முடிவுகள் இரண்டுகட்சிகளுக்கும் பின்னடைவாக உள்ளது.ஏழு தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க.விற்கு அன்புமணி போட்டியிட்ட தர்மபுரியும்,நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க.விற்கு சுதீஷ் போட்டியிட்ட கள்ளக்குறிச்சியும் கிடைத்தாலே பெரிய விஷயம் என கருத்து கணிப்புகளில் சொல்லப்படுகிறது.

ADVERTISEMENT


மேலும் பாமக,தேமுதிக ஆகிய இரு கட்சி தலைமைகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் முடிவுகள் இந்த இரண்டு கட்சிகளுக்கும் சாதகமாக வரவில்லை என்றால் அதிருப்தியாளர்கள் கட்சி தாவும் முடிவில் இருப்பதாகவும் அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT