ADVERTISEMENT

நாடு முழுவதும் 40- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை

02:57 PM Sep 16, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் 40- க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மதுபான ஆலையின் தொழிலதிபர்கள், விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் என இத்தொழிலில் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, டெல்லி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 6- ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 45 இடங்களில் முதல் சோதனை நடத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது முறையாக சோதனை நடத்தப்படுகிறது. மதுபான கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, டெல்லி மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது சி.பி.ஐ. கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்தது. அதன்பேரில், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீடு உட்பட பல்வேறு இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT