ADVERTISEMENT

இ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...

04:05 PM Sep 18, 2019 | kirubahar@nakk…

புகையிலையில் கொண்ட சிகரெட்டுகளை மாற்றாக கொண்டுவரப்பட்ட இ-சிகரெட்டுகள் உடலுக்கு பெரும் தீங்கு விளைவிப்பதால், அதற்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவ செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், வரும்காலத்தில் இந்த இ-சிகரெட்டுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும், இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்படவுள்ளதாகவும், இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையை மீறுபவர்களுக்கு அதிகபட்சம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT